குறுந்தொகை 184, ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன் 

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கு இது மாண்டது என்னாது அதன் பட்டு
ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம்
மயில் கண் அன்ன மாண் முடிப் பாவை  5
நுண் வலைப் பரதவர் மடமகள்
கண் வலைப்படூஉம் கானலானே.

 

பாடல் பின்னணி:  தன்னை இடித்துரைத்த நண்பனிடம் தலைவன் கூறியது.

 

பொருளுரை:  மயிலின் பீலிக் கண்ணைப் போன்ற மாட்சிமைபொருந்திய கூந்தலையுடைய, பொம்மையைப் போன்ற, நுண்ணிய வலை பரதவரின் இள மகளின் கண் வலையில் அங்குச் செல்பவர்கள் அகப்படுகின்ற கடற்கரைச் சோலையில், என்னுடைய மாண்பு மிக்க நெஞ்சம் இப்பொருளுக்கு இப்பொருள் ஏற்ற மாட்சியை உடையது என்று ஆராயாது, அகப்பட்டு அவ்விடத்தில் தங்கிவிட்டது.  தாம் கண்டதை மறைத்துப் பொய்  சொல்லுதல் அறிவுடையவர்களுக்கு இல்லை.  நான் கூறுவதை உண்மையாகக் கொள்ளுங்கள்.  அவளுடைய சிற்றூருக்குச் செல்வதைத் தவிருங்கள்.

 

குறிப்பு:  செலவே – ஏகாரம் அசை நிலை, ஒழிந்தன்றே – ஏகாரம் அசை நிலை, கானலானே – ஏகாரம் அசை நிலை, ஓம்புமின் (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாண்தகை நெஞ்சம் என்றான், அவளைக் காணுமுன்பெல்லாம் ‘தக்க இன்ன தகாதன இன்ன’ என்று ஆராயும் மாண்புடைய நெஞ்சமே யானும் உடையேன்.

 

சொற்பொருள்:  அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை – தாம் கண்டதை மறைத்துப் பொய் சொல்லுதல் அறிவுடையவர்களுக்கு இல்லை, குறுகல் – அருகில் செல்லுதல், ஓம்புமின் – பாதுகாத்துக் கொள்ளுங்கள், சிறுகுடிச் செலவே – சிற்றூருக்குச் செல்லுதல், இதற்கிது மாண்டது – இப்பொருளுக்கு இப்பொருள் ஏற்ற மாட்சியை உடையது, என்னாது – ஆராயாது, அதன் பட்டு – அந்த வலையில் பட்டு, ஆண்டு ஒழிந்தன்றே – அவ்விடத்தில் தங்கியது, மாண் தகை நெஞ்சம் – என்னுடைய மாட்சிமையையுடைய நெஞ்சம், மயில் கண் அன்ன – மயிலின் தோகையில் உள்ள கண்ணைப் போல, மாண் முடிப் பாவை – மாட்சிமையுடைய முடியையுடைய பாவை போல்வாளாகிய பெண், மாட்சிமையுடைய முடியையுடைய பொம்மையைப் போன்ற பெண் (பாவை – பொம்மை, சிலை), நுண் வலை – நுண்ணிய வலை, பரதவர் மடமகள் – பரதவரின் இளமகள், கண் வலைப்படூஉம் – கண் வலையில் அகப்படுகின்ற (வலைப்படூஉம் – இன்னிசை அளபெடை), கானலானே – கடற்கரைச் சோலையில்

 

Kurunthokai 184, Ārya Arasan Yāl Piramathathan, Neythal Thinai – What the hero said to his friend
My friend!  The wise who know
truths do not lie.

Avoid going to that village. 
My very esteemed heart stays there
losing judgement, caught by the eyes
of a delicate, doll-like young woman,
daughter of a fisherman owning fine
fine nets, whose beautiful hair is like
peacock feathers with eyes.

 

Notes:  தன்னை இடித்துரைத்த நண்பனிடம் தலைவன் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாண்தகை நெஞ்சம் என்றான், அவளைக் காணுமுன்பெல்லாம் ‘தக்க இன்ன தகாதன இன்ன’ என்று ஆராயும் மாண்புடைய நெஞ்சமே யானும் உடையேன்.  This is the only poem written by this northern king.  The legend is that the long Pathupāttu song, Kurinjippāttu, was written by Kapilar for this king, to explain Tamil love and marriage traditions. 

 

Meanings:  அறிகரி – those who know the truth, those who have witnessed, பொய்த்தல் – to tell lies, ஆன்றோர்க்கு இல்லை – the wise do not do that, குறுகல் ஓம்புமின் – you avoid going near (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), சிறுகுடி செலவு – going to the small village, going to the small settlement, ஏ – அசை நிலை, an expletive, இதற்கு இது மாண்டது – without knowing its worth, என்னாது – without considering, அதன் பட்டு – it got caught by her eye net, ஆண்டு ஒழிந்தன்று – it has stayed there, ஏ – அசை நிலை, an expletive, மாண் தகை நெஞ்சம் – my very esteemed heart, மயில் கண் அன்ன – like peacock feather eyes, மாண் முடி பாவை – the doll-like young woman with splendid hair, the statur-like young woman with lovely hair, நுண் வலை – delicate net, பரதவர் மடமகள் – fisherman’s delicate daughter, கண் வலைப்படூஉம் – you will get caught in her eye net (வலைப்படூஉம் – இன்னிசை அளபெடை), கானலான் – in the seashore grove, on the seashore, ஏ – அசை நிலை, an expletive 

12. குறுந்தொகை பாடல் - 167
14. குறுந்தொகை பாடல் - 196