நற்றிணை 110, போதனார்

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப்,
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல்
‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5
அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்,
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றெனக்  10
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே?

 

பாடல் பின்னணி:  1.  நற்றாய் உடன்போக்கு மேற்கொண்ட மகளை எண்ணி வருந்தி உரைத்தது.  2.  மணம் நிகழ்ந்தபின் தலைவியின் இல்லச் சிறப்பினைக் கண்டு வந்து விவரித்த செவிலித்தாயிடம் நற்றாய் உரைத்தது.

 

பொருளுரை:  தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘ இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்?  திருமணம் புரிந்த கணவனின் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதால், அவளுடைய தந்தை கொடுத்த செல்வமிக்க உணவை மறுத்து, நீர் இருக்கும் பொழுது நனைந்து பின் நீர் இல்லாத பொழுது உலரும் நுண்ணிய மணல் போல, ஒரு பொழுதின்றி ஒரு பொழுது உண்ணும் சிறிய வலிமையுடையவள் ஆக இருக்கின்றாள் இப்பொழுது.

 

குறிப்பு:   பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் (1) – நற்றிணை 110 – பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் – ஒளவை துரைசாமி உரை – தேன் கலந்த சுவை மிக்க வெண்மையான இனிய பால், H.வேங்கடராமன் உரை – தேனை கலந்தாற்போன்ற நல்ல சுவையை உடைய இனிய வெள்ளிய பால், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேன் கலந்தாலொத்த நல்ல சுவையையுடைய இனிய வெளிய பால்.  பூந்தலை (3) – ஒளவை துரைசாமி உரை – மென்மையான நுனி, H.வேங்கடராமன் உரை – பூக்களைத் தலையிலே கொண்ட, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பூவொத்த மெல்லிய நுனி.  இலக்கணம்:   பந்தர் – பந்தல் என்பதன் போலி, மதுகையளே – ஏகாரம் அசை நிலை.

 

சொற்பொருள்:  பிரசம் கலந்த – தேன் கலந்த, வெண் சுவைத் தீம் பால் – வெண்மையான சுவையான இனிய பால், விரி கதிர்ப் பொற்கலத்து – விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தில், ஒரு கை ஏந்தி – ஒரு கையில் ஏந்தியவண்ணம், புடைப்பின் சுற்றும் – முனையில் சுற்றிய, பூந்தலைச் சிறு கோல் – பூக்களைத் தலையில் கொண்ட சிறிய கோல், மென்மையான மேல்பகுதியைக் கொண்ட சிறு கோல், உண் என்று – ‘இதைக் குடி’ என்று, ஓக்குபு புடைப்ப – ஓங்கி அடிக்க, தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப – தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள பொற்சிலம்பு ஒலிக்க, தத்துற்று – பாய்ந்து, அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் – சிறிதாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள், பரி மெலிந்து ஒழிய – நடையின் தளர்ந்து ஓட முடியாமல், பந்தர் ஓடி – பந்தலுக்கு ஓடி, ஏவல் மறுக்கும் – ‘இதைக் குடி’ என்று அவர்கள் கூறுவதை மறுக்கும், சிறு விளையாட்டி – விளையாடும் இளைய பெண், அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல் – எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள், கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென – திருமணம் புரிந்த கணவனின் குடும்பத்தில் வறுமை உற்றதால், கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள் – அவளுடைய தந்தை கொடுக்கும் செல்வமிக்க உணவை, ஒழுகு நீர் நுணங்கு அறல் போல – ஓடுகின்ற நீரில் இருக்கும் நுண்ணிய மணல் போல, பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே – ஒரு பொழுதின்றி ஒரு பொழுது உண்ணும் சிறிய வலிமையுடையவளே

 

Natrinai 110, Pothanār, Pālai Thinai – What the heroine’s mother said
Her wise foster mothers with soft
white hair used to carry glowing, gold
bowls with sweet milk mixed with honey
and follow her.  They ran behind her to the
pavilion with raised, soft-topped, small
sticks, hit her, and urged her to drink.
My playful daughter’s golden anklets filled
with pearls from clear waters, jingled as she
jumped and ran away, refusing the milk
they brought.

Her husband’s family has grown poor now.
She does not think about the rich rice her
father gave.  Like fine sand in flowing water
that gets irregular water flow, my daughter
with some strength, eats every now and then.

How did she become so disciplined and
intelligent now?

 

Notes:  1.  நற்றாய் உடன்போக்கு மேற்கொண்ட மகளை எண்ணி வருந்தி உரைத்தது.  2.  மணம் நிகழ்ந்தபின் தலைவியின் இல்லச் சிறப்பினைக் கண்டு வந்து விவரித்த செவிலித்தாயிடம் நற்றாய் உரைத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழி கொள நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் செவிலிக்கு உரிய ஆகும் என்ப’ (தொல்காப்பியம், கற்பியல் 12) என்பதன் உரையில் ‘ஆகும்’ என்றதனாலே செவிலி நற்றாய்க்கு உவந்துரைப்பனவும் கொள்க என்று கூறி, இப்பாட்டைக்காட்டி ‘இது மனையறம் கண்டு மருண்டு உவந்து கூறியது’ என்றும், ‘சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு அனைநால் வகையும் சிறப்பொடு வருமே’ (தொல்காப்பியம், பொருளியல் 49) என்பதன் உரையில் இதனைக்காட்டி, ‘இது குடி வறனுற்றென நல்குரவு கூறியும் காதலைச் சிறப்பித்தலின் அமைந்தது என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.  பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் (1) – நற்றிணை 110 – பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் – ஒளவை துரைசாமி உரை – தேன் கலந்த சுவை மிக்க வெண்மையான இனிய பால், H.வேங்கடராமன் உரை – தேனை கலந்தாற்போன்ற நல்ல சுவையை உடைய இனிய வெள்ளிய பால், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேன் கலந்தாலொத்த நல்ல சுவையையுடைய இனிய வெளிய பால்.  பூந்தலை (3) – ஒளவை துரைசாமி உரை – மென்மையான நுனி, H.வேங்கடராமன் உரை – பூக்களைத் தலையிலே கொண்ட, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பூவொத்த மெல்லிய நுனி.

 

Meanings:  பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் – sweet white milk mixed with honey, sweet white milk that is like mixed with honey, விரி – wide, கதிர் – bright,  sparkling, பொற்கலத்து ஒரு கை ஏந்தி – carrying a gold bowl in one hand, புடைப்பின் – on the ends, சுற்றும் – tied around, பூந்தலை – delicate top, top with flowers, சிறு கோல் – small sticks, உண் என்று ஓக்குபு – raised saying ‘eat’, புடைப்ப – hit, தெண் நீர் – clear water, முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப – pearl filled gold anklets jingling, தத்துற்று – jumping, அரி நரைக் கூந்தல் – intermittent white hair, soft white hair, செம் முது செவிலியர் – wise old foster mothers, பரி மெலிந்து ஒழிய – unable to run behind, becoming tired and unable to run, பந்தர் ஓடி – run to the pavilion (பந்தர் – பந்தல் என்பதன் போலி), ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி – young girl who played a little refusing commands, அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல் – how did she become intelligent and disciplined, கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென – since her husband’s family lost money, கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் – she does not think about the rice her father gave, ஒழுகு நீர் நுணங்கு அறல் போல – like the fine sand under flowing water, பொழுது மறுத்து உண்ணும் – refuses and eats irregularly, சிறு மதுகையளே – the young woman with some strength (ஏ – அசை நிலை, an expletive)

21. நற்றிணை - பாடல் 90
23. நற்றிணை - பாடல் 136