குறுந்தொகை 229, மோதாசானார்

இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுப மன்னோ,
நல்லை மன்ற அம்ம பாலே மெல் இயல் 5
துணை மலர்ப் பிணையல் அன்ன, இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.

 

பாடல் பின்னணிதலைவனையும் தலைவியையும் முன்பு அறிந்தோர், சுரத்தில் அவர்களைக் கண்டபின் தம்முள் கூறியது.

 

பொருளுரை:  இவன் இவளுடைய ஐந்துப் பகுதியாக உள்ள கூந்தலைப் பிடித்து இழுப்பான்.  இவள் இவனுடைய குறைந்த  தலை மயிரை வளைத்து இழுத்து விட்டு ஓடுவாள்.  இவர்களுடைய அன்பான செவிலித் தாய்மார்கள் அதைத் தடுக்க முயற்சித்தாலும், தொடர்ந்து இவர்கள் அயலார் போலச் சிறு சண்டைகளைச் செய்வார்கள்.  ஊழ்வினையே!  நீ உறுதியாக நல்ல காரியம் செய்தாய்.  மலர்களை சேர்த்துக் கட்டிய இரட்டை மாலையைப் போல் இவர்கள் மணம் புரிந்து மகிழும் இயல்பை உண்டாக்கினாய்.

 

குறிப்பு:  அம்ம (5) – உ. வே. சாமிநாதையர் உரை  – வியப்பு இடைச்சொல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேட்பித்தற் பொருட்டு.  மன்றம்ம (5) – உ. வே. சாமிநாதையர் உரை – மன்ற அம்ம என்பது மன்றம்ம என வந்தது.  விகாரம்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

 

சொற்பொருள்:   இவன் இவள் ஐம்பால் பற்றவும் – இவன் இவளுடைய ஐந்துப் பகுதியாக உள்ள கூந்தலைப் பிடித்து இழுக்கவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் – இவள் இவனுடைய புல்லிய தலை மயிரை வளைத்து இழுப்பாளாக, பரியவும் – ஓடவும், காதல் செவிலியர் தவிர்ப்பவும் – அன்பான செவிலித் தாயார் தடுக்கவும்,  தவிராது – நிறுத்தாமல், ஏதில் சிறு செரு உறுப – அயன்மையையுடைய சிறு சண்டைகளைச் செய்வார்கள்,  மன் – கழிவுக்குறிப்பு, ஓ – அசை நிலை, நல்லை மன்ற – உறுதியாக நல்லது, அம்ம – வியப்பு இடைச்சொல், பாலே – ஊழ் வினையே, மெல் இயல் – மென்மையான, துணை மலர்ப் பிணையல் அன்ன – மலர்களை சேர்த்துக் கட்டிய இரட்டை மாலையைப் போல், இரண்டிரண்டு மலர்களால் இணைத்துக் கட்டிய மாலையைப் போன்று, இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோயே – இவர்கள் மணம் புரிந்து மகிழும் இயல்பை உண்டாக்கினாய்

 

Kurunthokai 229, Mōthāsanār, Pālai Thinai – What the bystanders said
He used to pull her five-part braid.
She used to twist and pull his dry hair
and run away swiftly.

Their doting foster mothers intervened,
but could not stop their little battles.

Fate!  You are good indeed!  You made
them happy in union like two delicate
flowers woven in a garland.

Notes:  தலைவனையும் தலைவியையும் முன்பு அறிந்தோர், சுரத்தில் அவர்களைக் கண்டபின் தம்முள் கூறியது.  அம்ம (5) – உ. வே. சாமிநாதையர் உரை  – வியப்பு இடைச்சொல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேட்பித்தற் பொருட்டு.  மன்றம்ம (5) – உ. வே. சாமிநாதையர் உரை – மன்ற அம்ம என்பது மன்றம்ம என வந்தது.  விகாரம்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

Meanings:  இவன் இவள் ஐம்பால் பற்றவும் – he pulled her five part plait, இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் – she used to twist his dry/thin/dirty hair, and pull it, பரியவும் – running away swiftly, காதல் செவிலியர் தவிர்ப்பவும் – even when their loving foster mothers intervened, தவிராது – without stopping, ஏதில் சிறு செரு உறுப – they fought unfriendly little battles with each other, மன் – கழிவுக் குறிப்பு, what was in the past, ஓ – அசை நிலை, நல்லை மன்ற – you are certainly good, (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty), அம்ம – வியப்பு இடைச்சொல், a particle signifying surprise, you listen, பாலே – O fate, மெல்லியல் – delicate natured, துணை மலர்ப் பிணையல் அன்ன – like two flower garlands that are entwined, two flowers that are woven in a garland (துணை மலர் – ), இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோய் – you made them be happy in marriage, ஏ – அசை நிலை, an expletive

15. குறுந்தொகை பாடல் - 218
17. அகநானூறு பாடல் - 203