நற்றிணை 90, அஞ்சில் அஞ்சியார்

ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்,
உடையோர் பன்மையின் பெருங்கை தூவா,
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர, ஓடிப்  5
பெருங்கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்,
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி,
நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள்,
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா  10
நயன் இல் மாக்களொடு கெழீஇ,
பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே.

 

பாடல் பின்னணி:  பரத்தையினால் பிரிந்த தலைவன், தலைவியின் ஊடல் தணியப் பாணனை அனுப்புகிறான்.  அப்பாணன் கேட்குமாறு, தோழி தலைவியிடம், “அப்பரத்தை ஊஞ்சலாடாது அழுதாள்.  அவளை ஆற்றுவித்து மீண்டும் ஊஞ்சலாடுமாறு செய்ய அமையாதவனாய் உள்ளான் நம் தலைவன்.  அவள் ஊடியதால் இங்கு வர விரும்புகின்றான்” எனக் கூறி வாயில் (இல்லத்தில் புகுதல்) மறுத்தது.

 

பொருளுரை:   கேட்பாயாக!  நடனமாடுகின்ற விழாக்களில் ஒலியை உடைய பழமையான ஊரில் ஆடைகளைத் துவைக்கும், பெரிதும் தன் கை ஓயாத வறுமை இல்லாத வண்ணாத்தி இரவில் துவைத்த சோற்றின் கஞ்சியை இட்ட சிறிய பூ வேலைப்பாடு அமைந்த ஆடையுடன், தன் பொன் மாலை அசைய ஓடிச் சென்று பெரிய கயிற்றால் தொங்கவிட்ட கரிய பனை நாரால் செய்யப்பட்ட ஊஞ்சலில் மலரைப் போலும் கண்களையுடைய தோழியர் ஆட்டவும் ஆடாமல் அழுது நகரும், அழகிய மென்மையான கூந்தலையுடைய, சில வளையல்களை அணிந்த, மிகவும் வருந்தும் இளம் பெண்ணின் ஊஞ்சலாடுகின்ற ஆரவாரத்தில் சேராத, விருப்பம் இல்லாத மக்களுடன் சேர்ந்து, பயன் இல்லாது உள்ளது தலைவனின் சுற்றம்.

 

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவின்கண் வரும், ‘வாயிலின் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ கிழவோள் செப்பல் கிழவது என்ப’ என்பதன் உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இது பாங்கனைக் குறித்துக் கூறியது’ என்பர் இளம்பூரணர்; ‘இது பாணனைக் குறித்துக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  பயன் இன்று வேந்துடை அவை (12) – ஒளவை துரைசாமி உரை – வேந்தனாகிய தலைவனது சுற்றம் பயன் தருவதன்று, பாணன் முதலிய சுற்றம் சூழஇருப்பு அவை எனப்பட்டது.  அம்ம (12) – ஒளவை துரைசாமி உரை- கேட்பாயாக (அம்ம கேட்பிக்கும் – (தொல்காப்பியம், இடையியல் 28)), பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என்ன வியப்பு.  புலைத்தி – அகநானூறு 34 – பசை கொல் மெல் விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 – பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 – வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 – நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 – ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 – புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்.

 

சொற்பொருள்:   ஆடு இயல் விழவின் – கூத்தாடுகின்ற (நடனமாடுகின்ற) விழாக்களில், அழுங்கல் மூதூர் – ஒலியை உடைய பழமையான ஊர், உடையோர் பன்மையின் – ஆடைகளை துவைக்கும் தன்மையில், பெருங்கை தூவா வறன் இல் புலைத்தி – பெரிதும் தன் கை ஓயாத வறுமை இல்லாத துவைக்கும் பெண், எல்லித் தோய்த்த – இரவில் துவைத்த, புகாப் புகர் கொண்ட – சோற்றின் கஞ்சியை இட்ட, புன் பூங்கலிங்கமொடு – சிறிய பூ வேலைப்பாடு அமைந்த ஆடையுடன், வாடா மாலை துயல்வர – வாடாத மாலை அசைய, பொன் மாலை அசைய, ஓடி – ஓடி, பெருங்கயிறு நாலும் – பெரிய கயிற்றால் தொங்கவிட்ட, இரும் பனம் பிணையல் – கரிய பனை நாரால் செய்யப்பட்ட ஊஞ்சலில், பூங்கண் ஆயம் ஊக்க – மலரைப் போலும் கண்களையுடைய தோழியர் ஆட்டவும், ஊங்காள் அழுதனள் பெயரும் – ஆடாமல் அழுது நகரும், அம் சில் ஓதி – அழகிய மென்மையான கூந்தல், நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள் – வருந்தும் பெண்ணாகிய சில வளையல்களை அணிந்த இளம் பெண், ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா – ஊஞ்சலாடுகின்ற தொழிலின் ஆரவாரத்தில் சேராத, நயன் இல் மாக்களொடு கெழீஇ – விருப்பம் இல்லாத மக்களுடன் சேர்ந்து, பயன் இன்று – பயன் இல்லை, அம்ம – கேட்பாயாக, வியப்பு, அசை நிலையுமாம், இவ் வேந்துடை அவையே – வேந்தனாகிய இத் தலைவனின் சுற்றம்

 

Natrinai 90, Anjil Anjiyār, Marutham Thinai What the heroine’s friend said to her, as the messenger bard listened nearby
Listen!  In this ancient town with
festivities and dances, 
a washer-woman who labors for many
and does not know poverty, soaks at 
night clothes in thin rice gruel and rinses
them, and the soft fine clothes washed
by her are worn by the young woman 
donning a gold garland that sways as
she runs, refusing to play on a swing,
with thick ropes made with dark palmyra
tree fibers, when pushed by her friends
with flower-like eyes.
She cries as she moves away, the young
woman with soft hair and few bangles,
the one who is in distress.
His friends are with those who do not
encourage her to swing again with uproar.
He is here because of her sulking.  May he
not come here! 

 

Notes:   தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ப் பாணனுக்கு வாயில் (இல்லத்தில் புகுதல்) மறுத்தது.  பரத்தையினால் பிரிந்த தலைவன், தலைவியின் ஊடல் தணியப் பாணனை அனுப்புகிறான்.  அப்பாணன் கேட்குமாறு, தோழி தலைவியிடம், “அப்பரத்தை ஊஞ்சலாடாது அழுதாள்.  அவளை ஆற்றுவித்து மீண்டும் ஊஞ்சலாடுமாறு செய்ய அமையாதவனாய் உள்ளான் நம் தலைவன்.  அவள் ஊடியதால் இங்கு வர விரும்புகின்றான்” எனக் கூறி வாயில் மறுத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவின்கண் வரும், ‘வாயிலின் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ கிழவோள் செப்பல் கிழவது என்ப’ என்பதன் உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இது பாங்கனைக் குறித்துக் கூறியது’ என்பர் இளம்பூரணர்; ‘இது பாணனைக் குறித்துக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  பயன் இன்று வேந்துடை அவை (12) – ஒளவை துரைசாமி உரை – வேந்தனாகிய தலைவனது சுற்றம் பயன் தருவதன்று, பாணன் முதலிய சுற்றம் சூழஇருப்பு அவை எனப்பட்டது.  அம்ம (12) – ஒளவை துரைசாமி உரை- கேட்பாயாக (அம்ம கேட்பிக்கும் – (தொல்காப்பியம், இடையியல் 28)), பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என்ன வியப்பு.   புலைத்தி – அகநானூறு 34 – பசை கொல் மெல் விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 – பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 – வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 – நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 – ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 – புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்.

 

Meanings:  ஆடு இயல் விழவின் – with festivals with dances, with festivals with artists, அழுங்கல் மூதூர் – loud ancient town, உடையோர் பன்மையின் – since there are many, பெருங்கை தூவா – with non-stopping business, வறன் இல் – without poverty, புலைத்தி – a washerwoman, எல்லி – night, தோய்த்த – soaked, dipped, புகா – food, புகர் – rice gruel, kanji, கொண்ட – with, புன் பூங்கலிங்கமொடு – with soft lovely clothes, with small lovely clothes, with soft clothes with flower designs, வாடா மாலை – a garland that is not faded, a gold garland, துயல்வர – swaying, ஓடி – run, பெருங்கயிறு – big rope, நாலும் – hanging, இரும் பனம் – dark palmyra, பிணையல் – tied, woven, பூங்கண் – flower-like eyes, pretty eyes, ஆயம் – friends, ஊக்க – as they pushed, ஊங்காள் – she does not swing, அழுதனள் பெயரும் – she cried and moved, அம் சில் ஓதி – beautiful delicate hair, நல்கூர் பெண்டின் – of a woman who is suffering as in poverty, சில் வளைக் குறுமகள் – a young woman with few bangles, ஊசல் உறு தொழில் – swinging business, பூசல் கூட்டா – not creating uproar, நயன் இல் மாக்களொடு கெழீஇ – together with undesirable people, together with people who are not kind (கெழீஇ – சொல்லிசை அளபெடை), பயன் இன்று – without use, அம்ம – அசை நிலை, an expletive, இவ் வேந்துடை அவையே – the bard and other friends of this man (the hero), this king’s dance hall, the king’s assembly hall (ஏ – அசை நிலை, an expletive)

20. நற்றிணை பாடல் - 45
22. நற்றிணை - பாடல் 110