கலித்தொகை 9, பாலை பாடிய பெருங்கடுங்கோ 

செவிலித்தாய் வைணவத் துறவியிடமும் அவருடைய மாணாக்களிடமும் சொன்னது :

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ் இடை  5
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரை காணிரோ பெரும?

வைணவத் துறவி:

காணேம் அல்லேம்!  கண்டனம்!  கடத்து இடை
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய,  10
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர்!

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,  15
நீர் உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!  20

என, ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,
அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே.

 

பொருளுரை:

செவிலித்தாய்:  காயும் ஞாயிற்றுக் கதிர்களின் வெட்பத்தைத் தாங்கி நிழலைத் தரும் குடைகளை உங்கள் கைகளில் ஏந்தி, உறியில் தொங்கும் தண்ணீர்க் கமண்டலத்தையும் முக்கோலையும் முறைப்படத் தோளில் சுமந்து, இறைவனைத் தவிர வேறு எதையும் எண்ணாத நெஞ்சத்துடன், ஐம்பொறிகளும் நீங்கள் ஏவிய வழியில் நடப்பதை முறையாகப் பெற்ற அந்தணர்களே!  வெட்பம் மிகுந்த இக்காட்டு வழியில் செல்லும் சிறந்த ஒழுக்கத்தை உடையவர்களே!

ஐயா!  பிறர் அறியாமல் இணைந்த என் மகளும் ஒருத்தியின் மகனும், பிறர் அறிந்ததால், இந்தப் பாதையில் செல்லுவதை நீவிர் கண்டீர்களா?

வைணவத் துறவி:  நாங்கள் காணாது இருக்கவில்லை.  கண்டோம்.  அழகான சிறந்த ஆணுடன் கடுமையான காட்டு வழியில் செல்லும் அழகிய அணிகளை அணிந்த இளம் பெண்ணின் தாயாக இருப்பீர் போலும்,

பல மணங்களையுடைய நறுமணச் சந்தனம் பயன்படுத்துபவர்களுக்குப் பயன் கொடுப்பது அல்லாது, தான் பிறந்த மலைக்கு எந்த வகையில் பயன்படும்?  நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே,

சிறப்பு மிகுந்த வெள்ளை முத்துக்கள் அணிபவர்களுக்கு அழகைக் கொடுப்பது அல்லாது, தாம் பிறந்த கடலுக்கு எந்த வகையில் பயன்படும்?  நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே

ஏழு நரம்புகளில் எழும் இனிய இசை, இசைப்பவர்களுக்கு அல்லாது, யாழில் பிறந்தாலும் யாழ்க்கு எந்த வகையில் பயன்படும்?  நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே

ஆதலால், சிறந்த கற்பு நெறியை மேற்கொண்டு, தலைசிறந்த ஒருவனை ஏற்றுக் கொண்டு சென்ற உன் மகளை எண்ணி வருந்தாதீர்!  அவள் சென்ற வழி அறத்தொடு ஒத்தது ஆகும்!

 

குறிப்பு:  முக்கோல் என்பது முத்தண்டு.  திரிதண்டம் என்றும் கூறப்படும்.  மூன்று கோல்களை இணைத்துக்  கட்டிய இதனை வைணவத் துறவிகள் (முக்கோல் பகவர், திரிதண்டி) கையில் வைத்திருப்பார்கள்.  முக்கோல் பகவர் என்பவர்கள் ‘உள்ளம், மெய், நா’ ஆகியவற்றை அடக்கியவர்கள்.  கலித்தொகை 126 – முக்கோல் கொள் அந்தணர், முல்லைப்பாட்டு 38 – கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல்.  நச்சினார்க்கினியர் உரை – ‘அரி, அயன், அரன் என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த முக்கோல்’.

 

சொற்பொருள்:  எறித்தரு கதிர் தாங்கி – காயும் ஞாயிற்றின் கதிர்களின் வெட்பத்தைத் தாங்கி, ஏந்திய குடை – பிடித்த குடை, நீழல் – நிழல், உறித் தாழ்ந்த கரகமும் – உறியில் தங்கிய கமண்டலமும், உரை சான்ற முக்கோலும் புகழ் பெற்ற திரிதண்டமும், நெறிப்படச் சுவல் அசைஇ – முறைப்படத் தோளில் வைத்து, வேறு ஓரா நெஞ்சத்து – இறைவனைத் தவிர வேறு எதையும் எண்ணாத நெஞ்சத்துடன், குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்- ஐம்பொறிகளும் நீங்கள் ஏவிய வழியில் நடப்பதை முறையாகப் பெற்ற அந்தணர்களே, வெவ் இடைச் செலல் – வெட்பம் மிகுந்த காட்டு வழியில் செல்லுதல், மாலை ஒழுக்கத்தீர் – சிறந்த ஒழுக்கத்தை உடையவர்களே, இவ் இடை – இந்தப் பாதையில், என் மகள் ஒருத்தியும் – என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும் – வேறு பெண்ணின் மகன் ஒருவனும், தம் உளே புணர்ந்த – பிறர் அறியாமல் தாங்கள் இணைந்த, தாம் – அவர்கள், அறி புணர்ச்சியர் – அவர்களுடையப் புணர்ச்சி பிறரால் அறியப்பட்டது, அன்னார் இருவரை காணிரோ – அவர்கள் இருவரையும் கண்டீர்களா, பெரும – ஐயா (பெரும – நச்சினார்க்கினியர் உரை – பெரும என்றாள், அவர்கள் ஆசிரியனாக பெரியோனை),

காணேம் அல்லேம் – நாங்கள் காணாது இருக்கவில்லை, கண்டனம் – கண்டோம், கடத்து இடை  – காட்டில், ஆண் எழில் அண்ணலோடு – அழகான சிறந்த ஆணுடன், அருஞ்சுரம் முன்னிய – கடுமையான காட்டு வழியில் செல்லும், மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர் – நீங்கள் அழகிய அணிகளை அணிந்த இளம் பெண்ணின் தாயாக இருப்பீர் போலும்,

பல உறு நறும் சாந்தம் – பல மணங்களையுடைய நறுமணச் சந்தனம்,  படுப்பவர்க்கு அல்லதை – உபயோகிப்பவர்களுக்கு அல்லாமல், மலை உளே பிறப்பினும் – மலையில் பிறந்தாலும், மலைக்கு அவை தாம் என் செய்யும் – மலைக்கு எந்த வகையில் பயன்படும், நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே,

சீர்கெழு – சிறப்பு மிகுந்த, வெண் முத்தம் – வெள்ளை முத்துக்கள், அணிபவர்க்கு அல்லதை – அணிபவர்களுக்கு இல்லாமல், நீர் உளே பிறப்பினும் – கடல் நீரில் பிறந்தாலும், நீர்க்கு அவை தாம் என் செய்யும் – கடலுக்கு எந்த வகையில் பயன்படும், தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே,

ஏழ் புணர் – ஏழு நரம்புகளில் எழும் இசை, இன் இசை – இனிமையான இசை, முரல்பவர்க்கு அல்லதை – இசைப்பவர்களுக்கு அல்லாது, யாழ் உளே பிறப்பினும் – யாழில் பிறந்தாலும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – யாழ்க்கு எந்த வகையில் பயன்படும், சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே,

என – என்று, ஆங்கு – எங்கு, இறந்த கற்பினாட்கு – கற்பு நெறியை மேற்கொண்டவளுக்கு,  எவ்வம் படரன்மின் – வருந்தாதே, சிறந்தானை வழிபடீஇச் சென்றனள் – தலைசிறந்த ஒருவனை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளாள், அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே – அவள் சென்ற வழி அறத்தொடு ஒத்தது ஆகும்

 

Kalithokai 9, Pālai Pādiya Perunkadunkō, What the heroine’s foster mother and a Vaishnava ascetic said
Foster mother to a Vaishnava ascetic and his disciples:
O Brahmins of righteousness, with hearts that
think not of other than virtue, who hold in servitude
your five senses, holding umbrellas that bear the
hot rays of the scorching sun, bearing pots hanging
on loops, carrying famed three staves on your shoulders
in a perfect manner, and going through the hot
wasteland path!  Oh lord, did you see my daughter
and the son of another woman, who united in secrecy,
their union now known to others?

Vaishnava ascetic:

Not that we did not see them. We did see them on the
forest path. You appear to be the mother of the young
woman wearing pretty jewels, who is on the harsh path
with her handsome man.

Other than to those who wear them, of what use is the
fragrant sandal to the mountain that gave birth to it?
When one thinks about it, your daughter is like that to
you!

Other than to those who wear them, of what use are lovely,
splendid, white pearls to the ocean that bore them?
When one thinks about it, your daughter is like that to you!

Other than to those who hear them, of what use is the sweet
music of seven strings to the yāl that gave birth to it?
When one thinks about it, your daughter is like that to you!

Grieve not for your daughter of chastity who has left. She
has gone with her fine man on the righteous path. Also,
that is the virtuous path!

 

Notes: முக்கோல் is the முத்தண்டு (திரிதண்டம்) of Vaishnava ascetics. Three wooden rods are tied together and carried by ascetics. The three rods signify controlling ‘thoughts, words and deeds’. முக்கோல் பகவர் (திரிதண்டி) – ‘உள்ளம், மெய், நா’ ஆகியவற்றை அடக்கியவர்கள். Kalithokai 126 – முக்கோல் கொள் அந்தணர், Mullaippāttu 38 – கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல். நச்சினார்க்கினியர் உரை – ‘அரி, அயன், அரன்’ என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த முக்கோல்’.

 

Meanings: எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல் – in the shade of the lifted umbrella that bears the harsh hot rays given by the sun (நீழல் – நிழல் என்பதன் விகாரம்), உறித் தாழ்ந்த கரகமும் – and water pots hanging on rope hoops, உரை சான்ற முக்கோலும் – and famed three wooden rods, நெறிப்பட சுவல் அசைஇ – placing on your shoulder in a proper manner (அசைஇ – சொல்லிசை அளபெடை), வேறு ஓரா நெஞ்சத்து – with a heart that does not think about anything else (other than god), குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர் – Oh Brahmins with the principle of controlling your senses properly, வெவ் இடைச் செலல் – going through the hot wasteland path, மாலை ஒழுக்கத்தீர் – Oh those with perfect behavior, இவ் இடை – in this place, on this path, என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் – my daughter and the son of another woman, தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் – they united secretly without others but others are aware of it now, அன்னார் இருவரை காணிரோ – did you see both of them, பெரும – Oh lord (பெரும – நச்சினார்க்கினியர் உரை – பெரும என்றாள் அவர்கள் ஆசிரியனாக பெரியோனை),
காணேம் அல்லேம் – not that we did not see them, கண்டனம் – we saw them, கடத்து இடை – in the forest path, ஆண் எழில் அண்ணலோடு – with the handsome noble man, அரும் சுரம் முன்னிய மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர் – you appear to be the mother of the young woman wearing fine jewels and going on the harsh wasteland path மடவரல் அன்மொழித்தொகை,
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை – other than to those who wear (smear, rub) fragrant sandal with many fragrances, மலை உளே பிறப்பினும் – even though they are born in the mountains, மலைக்கு அவை தாம் என் செய்யும் – of what use are they to the mountains, நினையுங்கால் – when you think about it (கால் ஈற்று வினையெச்சம்), நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – your daughter is like that to you,
சீர்கெழு வெண்முத்தம் – splendid white pearls, அணிபவர்க்கு அல்லதை – other than to those who wear them, நீர் உளே பிறப்பினும் – even though they are born in the ocean, நீர்க்கு அவை தாம் என் செய்யும் – what will they do for the ocean, தேருங்கால் – when analyzed (கால் ஈற்று வினையெச்சம்), நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – your daughter is like that to you,
ஏழ் புணர் இன் இசை – sweet music that rises from seven strings, முரல்பவர்க்கு அல்லதை – other than to those who play/sing, யாழ் உளே பிறப்பினும் – even though the music is born in the yāl, யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – what will it do for the yāl, சூழுங்கால் – when one thinks about it (கால் ஈற்று வினையெச்சம்), நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – your daughter is like that you,
என ஆங்கு இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின் – so please do not grieve for her who went with chastity (ஆங்கு – அசைநிலை, an expletive, படரன்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), சிறந்தானை வழிபடீஇச் சென்றனள் – she adored a great man and went with him (வழிபடீ- சொல்லிசை அளபெடை), she went following an exalted man, அறம்தலை பிரியா – not swaying from righteousness, ஆறும் மற்று அதுவே – besides that is the right path (அதுவே – ஏகாரம் அசை நிலை, an expletive)

18. கலித்தொகை பாடல் - 37
20. நற்றிணை பாடல் - 45