குறுந்தொகை 25, கபிலர் 

யாரும் இல்லைத் தானே கள்வன்,
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே. 5

பாடல் பின்னணிதலைவன் நீண்ட காலம் தன்னை மணஞ்செய்யாமல் இருத்தல் பற்றி தலைவி வருந்தித் தோழியிடம் கூறியது.

பொருளுரை:  தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில், அங்கே சான்றாகத் தக்கார் யாரும் இல்லை.  என் நலத்தை நுகர்ந்த கள்வன் அவன்.  அவன் என்னிடம் கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினால் நான் என்ன செய்வேன்?  நான் அவனோடு இருந்த நாளில், அங்கே ஓடுகின்ற நீரில் செல்லுகின்ற ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகு மட்டுமே இருந்தது.

குறிப்பு:  பாடபேதம் வரி 1 – யாரும் இல்லைத் தானே களவன்.  அகநானூறு 246 – கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக.  களவன் – சாட்சியாக இருந்தவன்.  குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே (5) – இரா. இராகவையங்கார் உரை – குருகு பாராதாயினும் அக்களத்தில் அவன் சூளுரைத்தது கேட்டதேயாம் என்று ‘குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’ என்றாள்.  தானே – ஏகாரம் பிரிநிலை அசை, செய்கோ – ஓகாரம் அசை நிலை, ஞான்றே – ஏகாரம் அசை நிலை.  தலைவனைக் கள்வன் என்றல் –  நற்றிணை 28 – கள்வர் போலக் கொடியன், நற்றிணை 40 – நள்ளென் கங்குல் கள்வன் போல.

சொற்பொருள்:  யாரும் இல்லை – யாரும் அங்கு இல்லை, தானே கள்வன்-  அவன் கள்வன், அக்களத்தில் இருந்தவன் அவனே, சாட்சியாக இருந்தவன் அவனே, தான் அது பொய்ப்பின் – அவன் உறுதிமொழி பொய்யானால், யான் எவன் செய்கோ – நான் என்ன செய்வேன்,  தினைத்தாள் அன்ன – தினையின் அடிப்பகுதியைப் போல, சிறு பசுங்கால – சிறிய பசிய கால்கள், ஒழுகு நீர் – ஓடிச் செல்லும் நீர், ஆரல் பார்க்கும் – விலாங்கு மீனின் வருகையைப் பார்த்திருக்கும், குருகும் உண்டு – குருகு இருந்தது (உம்மை இழிவு சிறப்பு), தான் மணந்த ஞான்றே – தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில்

Kurunthokai 25, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
Nobody was there, just him,
the thief.  If he does not keep
his promise, what can I do?

A heron with thin green legs, like
millet stalks, was looking for eels in
the running water when he took me.

Notes:  தலைவன் நீண்ட காலம் தன்னை மணஞ்செய்யாமல் இருத்தல்பற்றி தலைவி வருந்தித் தோழியிடம் கூறியது.  அகநானூறு 246 – கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக.  களவன் – சாட்சியாக இருந்தவன்.  குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே (5) – இரா. இராகவையங்கார் உரை – குருகு பாராதாயினும் அக்களத்தில் அவன் சூளுரைத்தது கேட்டதேயாம் என்று ‘குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’ என்றாள்.  தலைவனைக் கள்வன் என்றல் –  நற்றிணை 28 – கள்வர் போலக் கொடியன், நற்றிணை 40 – நள்ளென் கங்குல் கள்வன் போல.

Meanings:  யாரும் இல்லை – nobody was there (யாரும் – உம்மை முற்றுப்பொருள்), தானே கள்வன் – he who was the thief was the one there, he was the only one who was there (ஏ – பிரிநிலை, exclusion), அது பொய்ப்பின் – if he does not keep up his promise, யான் எவன் செய்கு – what can I do, (செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending), ஓ – அசை நிலை, an expletive, தினைத் தாள் அன்ன- like millet stalks, Italian millet, Setaria italicum, சிறு பசுங்கால – with thin legs, with tender legs, with green legs, ஒழுகு நீர் – running water, stream, ஆரல் பார்க்கும் – looking for eels, விலாங்கு மீன், Brown or green sand eel, Rhynchobdella aculeate, குருகும் உண்டு – heron/egret/stork was there (உம்மை இழிவு சிறப்பு), தான் மணந்த – when he took me, when he united with me, ஞான்று – on that day, ஏ – அசை நிலை, an expletive

[/fusion_text][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container]

1. குறுந்தொகை பாடல் - 8
3. குறுந்தொகை பாடல் - 28