நற்றிணை 45, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை 

இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே;  5
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும், செல நின்றீமோ!
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே;  10
எம்மனோரில் செம்மலும் உடைத்தே

பாடல் பின்னணி:  குறை வேண்டி நின்ற தலைவனைத் தோழி சேட்படுத்தது.

பொருளுரை:   என் தோழியோ கடற்கரைச் சோலையின் அருகில் உள்ள அழகிய சிற்றூரில் உள்ள, கடலில் சென்று மீனைப் பிடிக்கும் பரதவரின் மகள்.   நீயோ பெரிய கொடிகள் பறக்கும் கடை வீதிகள் உள்ள பழமையான ஊரில் விரைந்துச் செல்லும் தேரையுடைய பணக்காரரின் அன்பு மகன்.  கொழுத்த சுறா மீனை அறுத்துக் காய வைத்து பறவைகளை விரட்டும் எங்களுக்கு உன்னால் என்ன பயன்?  இங்கு மீன் நாற்றம் அடிக்கின்றது.  நிற்காமல் இங்கிருந்து போய் விடு.   பெரிய கடல் தரும் பயனால் நாங்கள் எளிய நல்ல வாழ்க்கையை வாழ்கின்றோம்.  அது உன்னுடையதைப் போன்று உயர்வானது இல்லை.  ஆனால், எங்கள் நடுவிலும் உயர்ந்தோர் உள்ளனர்!

சொற்பொருள்:   இவளே – இவள், கானல் நண்ணிய – கடற்கரை சோலை அருகே உள்ள, காமர் சிறுகுடி – அழகிய சிற்றூர்,  நீல் நிறப் பெருங் கடல் – நீல நிறமுடைய பெரிய கடல், கலங்க – கலங்க, உள்புக்கு – உள்ளே புகுந்து,  மீன் எறி பரதவர் மகளே – மீனை பிடிக்கும் பரதவர் மகள், நீயே – நீ, நெடுங் கொடி நுடங்கும் – பெரிய கொடி பறக்கும், நியம மூதூர் – கடைவீதி உள்ள பழமையான ஊர்,  கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே – விரைவாகச் செல்லும் தேரையுடைய செவந்தரின் அன்பு மகன், நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி – கொழுத்த சுறா மீனை அறுத்துக் காய வைக்க வேண்டி, இனப் புள் ஓப்பும் எமக்கு – பறவைகளை விரட்டும் எங்களுக்கு, நலன் எவனோ – என்ன பயன், புலவு நாறுதும் – இங்கு மீன் நாற்றம் அடிக்கின்றது, செல நின்றீமோ – நிற்காமல் நீ சென்று விடு, பெரு நீர் விளையுள் – கடலின் பலனால், எம் சிறு நல் வாழ்க்கை – எங்களுடைய எளிமையான வாழ்க்கை, நும்மொடு புரைவதோ அன்றே – உன்னுடையதைப் போன்று உயர்வானது இல்லை, எம்மனோரில் செம்மலும் உடைத்தே – எங்களிலும் உயர்ந்தோர் உள்ளனர்

 

Natrinai 45, Poet is Unknown, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
She is from a beautiful village
near the seashore grove,
the daughter of fishermen
who enter the big blue ocean,
stir it, and haul fish.

You are from an ancient town
with shops, where tall banners sway,
the beloved son of a wealthy man
owning fast chariots.

We chase the flocks of birds that
come desiring the fatty, shark meat
pieces we spread out to dry.
Of what use is your virtue to us?
We reek of fish!  Go away from here!

The good little lives that we
live here
from the yields of the big ocean
might not be as great as yours.
But among us too, there are fine men!

 

Notes:  குறை வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின் ‘பெருமையிற் பெயர்ப்பினும்’ என்ற பகுதிக்கு இப்பாட்டினை ஓதிக் காட்டுவர் இளம்பூரணர்.  நச்சினார்க்கினியரும் அதற்கே இதனைக் காட்டினர்.  ‘ஏனோர் பாங்கினும்’ (தொல்காப்பியம், புறத்திணையியல் 23) என்ற நூற்பா உரையுள் ‘கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே!’ என்றது அருமை செய்து அயர்த்தலின் அவனை இகழ்ச்சிக் குறிப்பால் தலைமையாகக் கூறினாள் என்பர்நச்சினார்க்கினியர்.

 

Meanings:  இவளே – this young woman, my friend, கானல் – seashore grove, நண்ணிய – nearby, காமர் – beautiful, desirable, சிறுகுடி – village, small settlement, நீல் நிறப் பெருங்கடல் – blue colored big ocean (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), கலங்க – stirring,  உள் புக்கு – going in, மீன் எறி – catching fish, பரதவர் மகளே – daughter of fishermen, நீயே – you, நெடுங்கொடி – tall banners, நுடங்கும் – swaying, நியம – with markets, மூதூர் – old town, கடுந்தேர் – fast chariots, செல்வன் – rich man, காதல் மகனே – beloved son, நிணச் சுறா – fatty shark, அறுத்த – sliced, cut up, உணக்கல் – dried food, வேண்டி – desiring, இனப் புள் – flock of birds, ஓப்பும் – chasing, எமக்கு நலன் எவனோ – of what use is your virtue to us, புலவு நாறுதும் – we reek of fish, செல – go away, நின்றீமோ – do not stand here(முன்னிலை ஒருமை முற்றுவினைத் திரிசொல்), இகரவீறு நீண்டு மோ என்னும் முன்னிலையசை பெற்றது, a verb with the second person singular ending, பெரு நீர் – the ocean, the sea, விளையுள் – with the yields from the place, எம் சிறு நல் வாழ்க்கை – our good little lives, நும்மொடு புரைவதோ அன்றே – are not great compared to yours (ஏ – அசை நிலை, an expletive), எம்மனோரில் – among our people, செம்மலும் உடைத்தே – there are also fine men (ஏ – அசை நிலை, an expletive)

19. கலித்தொகை பாடல் - 9
21. நற்றிணை - பாடல் 90