நற்றிணை 305, கயமனார் 

 

வரி அணி பந்தும், வாடிய வயலையும்,

மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,

கடியுடை வியல் நகர் காண்வரத் தோன்றத்

தமியே கண்ட தண்டலையும் தெறுவர

நோய் ஆகின்றே மகளை! நின் தோழி  5

எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை

வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி

உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி

இலங்கு இலை வென்வேல் விடலையை,

விலங்கு மலை ஆர் இடை, நலியும் கொல் எனவே?  10

 

பாடல் பின்னணி:  தலைவியை உடன்போக்கில் தலைவன் கூட்டிச் சென்று விட்டான் என்பதை செவிலித்தாய் மூலம் அறிந்த நற்றாய், தோழியிடம் சொல்லியது.

 

பொருளுரை:  வரிப் பந்தையும், வாடிய வயலைக் கொடியையும், மயிலின் அடியைப் போன்ற இலைகளையுடைய கரிய நிறத்தில் உள்ள மலர்க் கொத்துக்களையுடைய நொச்சி மரத்தையும், காவலையுடைய பெரிய இல்லத்தில் நான் காணும்பொழுது வருந்துகின்றேன்.  அவள் இல்லாமல் தனியாக நான் காணும் சோலையும் எனக்கு வருத்தத்தைத் தருகின்றது.  மன நோயினால் வருந்துகின்றேன்.  மகளே!  உன்னுடைய தோழி, கதிரவனின் வெப்பம் தணிந்த வேளையில், இலைகள் இல்லாத அழகிய மரக்கிளைகளில் அமர்ந்தபடி வரிகளை முதுகில் கொண்ட புறாக்களின் வருந்தும் தெளிவான கூவுதலைக் கேட்டு, வெப்பம் மிகுந்த பொழுதில், விலக்குகின்ற மலையின் அரிய பாதையில், போரிடுபவள் போல நோக்கி, விளங்கும் இலையை உடைய வெற்றிகரமான வேலையுடைய தன்னுடைய காதலனை, வருத்துவாளோ?

 

சொற்பொருள்:  வரி அணி பந்தும் – ஒப்பனையுடைய பந்தும், வரிகள் உடைய பந்தும், வாடிய வயலையும் – வாடிய வயலைக் கொடியும், மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும் – மயிலின் அடியைப் போன்ற இலைகளையுடைய கரிய நிறத்தில் உள்ள மலர்க் கொத்துக்களையுடைய நொச்சி மரமும், கடியுடை வியல் நகர் – காவலையுடைய பெரிய இல்லம், காண்வரத் தோன்ற – நான் காணுமாறு தோன்ற, தமியே – தனியாக, கண்ட – நான் கண்ட, தண்டலையும் – சோலையும், தெறுவர நோய் ஆகின்றே – வருத்தம் தருகின்றன, மகளை – மகளே, நின் தோழி – உன்னுடைய தோழி (என் மகள்), எரி சினம் தணிந்த – கதிரவனின் வெட்பம் தணிந்த, இலை இல் அம் சினை – இலைகள் இல்லாத அழகிய மரக்கிளை, வரிப் புறப் புறவின் – வரிகளை முதுகில் கொண்ட புறாக்களின், புலம்புகொள் தெள் விளி – வருந்தும் தெளிவான கூவுதல், உருப்பு அவிர் அமையத்து – வெப்பம் விளங்கும் பொழுது, அமர்ப்பனள் நோக்கி – போரிடுபவள் போல் நோக்கி, இலங்கு இலை – விளங்கும் இலை வடிவமாகிய, வென்வேல் – வெற்றிகரமான வேல், விடலையை – இளைஞனை, விலங்கு மலை – விலக்குகின்ற மலை, தடுப்பாக உள்ள மலை, ஆர் இடை – அரிய பாதை, நலியும் கொல் எனவே – வருத்துவாளோ என்று

 

Natrinai 305, Kayamanār, Pālai Thinai – What the heroine’s mother said to the heroine’s friend after her daughter eloped
Whenever I see her decorated ball,
withered vayalai vine, and the dark
colored clusters of nochi flowers on
the trees with leaves like feet of peacock,
in our well protected mansion, and when
I am alone in the grove, I am distressed.

Oh daughter!  I wonder whether your
friend will cause pain to the young man with
a  bright-bladed, victorious spear, on the
harsh trek through the blocking mountains,
with her warring eyes when the scorching
sun burns, after hearing pigeons with lines
on their backs cry in loud, plaintive tones,
perched on beautiful tree branches without
any leaves, when the sun’s heat is reduced.

 

Notes:  தலைவியை உடன்போக்கில் தலைவன் கூட்டிச் சென்று விட்டான் என்பதை செவிலித்தாய் மூலம் அறிந்த நற்றாய் தோழியிடம் சொல்லியது.  நலியும் கொல் (10) – ஒளவை துரைசாமி உரை – வேண்டாத வினாக்களை எழுப்பி வருத்துதல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – துன்புறுத்தல்.  மயிலடி அன்ன இலை – நற்றிணை 305 – மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், நற்றிணை 115 – மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி, குறுந்தொகை 138 – மயில் அடி இலைய மா குரல் நொச்சி.  திருமுருகாற்றுப்படை 68  – வரிப் புனை பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து.  மதுரைக்காஞ்சி 333 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து, நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிதலையுடைய பந்து, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – நூலால் வரிதலையுடைய பந்து.  கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து.  In poems Natrinai 12, 305, 324 and Kurunthokai 396, which were all written by Kayamanār, there are references to a ball played by the heroine. 

 

Meanings:  வரி அணி பந்தும் – ball with decorations, ball tied with thread, ball with beautiful lines, வாடிய வயலையும் – and withered vayalai vine, purslane vine, Portulaca quadrifida, மயில் அடி அன்ன – (leaves) like peacock feet, மாக் குரல் நொச்சியும் – and nochi trees with dark clusters of flowers, Vitex leucoxylon, Chaste tree, water peacock’s foot tree, கடியுடை – with protection, வியல் நகர் – huge house, காண்வரத் தோன்ற – appeared for me to see, தமியே – alone, கண்ட தண்டலையும் – the grove that I see, தெறுவர நோய் ஆகின்றே – causes me sadness and mental sickness (ஏ – அசை நிலை, an expletive), மகளை – oh daughter (ஐ – முன்னிலை அசை, an expletive of the second person), நின் தோழி – your friend (my daughter), எரி சினம் – intense heat of the sun, தணிந்த – reduced, இலை இல் – without leaves, அம் சினை –  beautiful tree branches, வரிப் புறப் புறவின் – of pigeons with lines on their backs, புலம்பு கொள் – pitiful, sorrowful, தெள் விளி – clear sounds, உருப்பு அவிர் அமையத்து – at the time when the sun’s heat becomes excessive, அமர்ப்பனள் நோக்கி – she who has warring looks, இலங்கு இலை – bright blade, வென்வேல் – victorious spear, விடலையை – the young man, விலங்கு மலை – the blocking mountains, ஆர் இடை – on the harsh paths, நலியும் கொல் – will she cause him pain (கொல் – ஐயப்பொருட்டு), எனவே – thus (ஏ – அசை நிலை, an expletive) 

23. நற்றிணை - பாடல் 136
25. நற்றிணை - பாடல் 397