குறுந்தொகை 28, ஔவையார் 

முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்,
அலமரல் அசை வளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே? 5

பாடல் பின்னணிதலைவன் பரிசப் பொருளுக்காகப் பிரிந்த காலத்தில் அவன் விரைந்து வராமையால் கவலையுற்ற தன் தோழியிடம் தலைவி கூறியது. 

பொருளுரை:  சுழலை உடைய அசையும் காற்று என்னை வருத்த, என்னுடைய துன்ப நோயை அறியாமல் தூங்கும் இந்த ஊரில் உள்ளவர்களை முட்டுவேனா?  தாக்குவேனா? ‘ஆ’ , ‘ஒல்’ எனக் கத்துவேனா, ஒரு காரணத்தை மேற்கொண்டு?  என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரையில் பாடலின் முதல் சொல் ‘மூட்டுவேன்’ என்று உள்ளது.  உ.வே. சாமிநாத ஐயரின் உரையில் ‘முட்டுவேன்’ என்று உள்ளது.  உ. வே. சாமிநாதையர் உரை – முட்டுதல் உடம்பால் தீண்டுதல் என்றும் தாக்குதல் கோல் முதலிய கருவிகளால் தீண்டுதல் என்றும் கொள்க.  முட்டுதல் எதிர்த்தலுமாம்.  சுவர் முதலியவற்றில் முட்டிக் கொள்வேனா தாக்கிக் கொள்வேனா என்று பொருள் கூறலும் ஆம்.  ஊர்  (5) – உ. வே. சாமிநாதையர் உரை – ஊரினர், இரா. இராகவையங்கார் உரை – ஊர் என்பது செவிலி, தாய் முதலியோர்.  கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt.  அசை வளி (4) – உ. வே. சாமிநாதையர் உரை – அசைந்து வருகின்ற தென்றற் காற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் கூதிர் காலமாகலின் வளி ஈதல் வாடை.  அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).  ஊர்க்கே –  ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:   முட்டுவேன் கொல் – முட்டுவேனா,   தாக்குவேன் கொல் – தாக்குவேனா,  ஓரேன் – ஒன்றும் புரியவில்லை,  யானும் –  நானும், ஓர் – ஒரு, பெற்றி மேலிட்டு – ஒரு தன்மையை மேற்கொண்டு, ஒரு காரணத்தால்,  ஆஅ ஒல்லென –  ஆ எனவும் ஒல் எனவும்,  கூவுவேன் கொல் – கத்துவேனா,  அலமரல் – சுழலுதல்,  அசை – அசையும்,  வளி – காற்று, அலைப்ப – வருந்த,  என் – என், உயவு – துன்ப, நோயறியாது – நோயை அறியாது,  துஞ்சும் ஊர்க்கே – தூங்கும் ஊரில் உள்ளவர்களை

Kurunthokai 28, Avvaiyār, Pālai Thinai – What the heroine said to her friend when her lover was away
Will I hit?  Will I attack?
Will I scream ‘Ah’ and
‘Ol’ citing some reason?
The wind blows and swirls 
causing me distress, while
those in town are sleeping,
unaware of my love affliction.

I do not know what to do?

Notes:  தலைவன் பரிசப் பொருளுக்காகப் பிரிந்த காலத்தில் அவன் விரைந்து வராமையால் கவலையுற்ற தன் தோழியிடம் தலைவி கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரையில் பாடலின் முதல் சொல் ‘மூட்டுவேன்’ என்று உள்ளது.  உ.வே. சாமிநாத ஐயரின் உரையில் ‘முட்டுவேன்’ என்று உள்ளது.  உ. வே. சாமிநாதையர் உரை – முட்டுதல் உடம்பால் தீண்டுதல் என்றும் தாக்குதல் கோல் முதலிய கருவிகளால் தீண்டுதல் என்றும் கொள்க.  முட்டுதல் எதிர்த்தலுமாம்.  சுவர் முதலியவற்றில் முட்டிக் கொள்வேனா தாக்கிக் கொள்வேனா என்று பொருள் கூறலும் ஆம்.  ஊர்  (5) – உ. வே. சாமிநாதையர் உரை – ஊரினர், இரா. இராகவையங்கார் உரை – ஊர் என்பது செவிலி, தாய் முதலியோர்.  கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt.  அசை வளி (4) – உ. வே. சாமிநாதையர் உரை – அசைந்து வருகின்ற தென்றற் காற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் கூதிர் காலமாகலின் வளி ஈதல் வாடை.  அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).

Meanings:  முட்டுவேன் கொல் – will I hit (முட்டுவேன் – முற்றெச்சம்), தாக்குவேன் கொல் – will I attack , ஓரேன் – I do not know what to do, யானும் – if I, ஓர் பெற்றி மேலிட்டு – on some pretext, using a course of action, ஆஅ ஒல்லென – ‘Ah’ and ‘Ol’, கூவுவேன் கொல் – will I shout, அலமரல் – swirling, அசை – moving, வளி – wind, breeze, அலைப்ப – causing distress, என் – my, உயவு நோய் அறியாது – not understanding my painful disease, துஞ்சும் ஊர்க்கு – sleeping town, ஏ – அசை நிலை, an expletive

[/fusion_text][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container]

2. குறுந்தொகை பாடல் 25
4. குறுந்தொகை பாடல் - 41