குறுந்தொகை 43, ஔவையார் 

செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே,
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே,
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல்
நல் அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.  5

 

பாடல் பின்னணிதலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி, தோழியிடம் உரைத்தது.

 

பொருளுரை:  தலைவர் செல்ல மாட்டார் என்று எண்ணி அவர் செலவை அழுங்காமல் சோர்ந்திருந்தேன் நான்.  பிரிவை உணர்த்தினால் இவள் உடன்பட மாட்டாள் என்று எண்ணி பிரிவு உணர்த்தலில் சோர்ந்திருந்தார் அவர்.  அவ்வழி, இருவரிடமும் உள்ள மனவலிகள் செய்த போரினால், நல்ல பாம்பு கடித்தாற்போல் வருந்துகின்ற என் நெஞ்சம் மேலும் சுழலுகின்றது.

 

குறிப்பு:  இகழ்ந்தனனே, இகழ்ந்தனரே, அலமலக்குறுமே – ஏகாரம் அசைநிலைகள்.

 

சொற்பொருள்:  செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே – தலைவர் செல்வார் செல்ல மாட்டார் என்று எண்ணி செலவு அழுங்காமல் சோர்ந்திருந்தேன், ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே – பிரிவை உணர்த்தினால் இவள் உடன்பட மாட்டாள் என்று எண்ணி அவர் பிரிவு உணர்த்தலில் சோர்ந்திருந்தார், ஆயிடை – அவ்வழி, இரு பேர் ஆண்மை செய்த பூசல் – இருவரிடமும் உள்ள ஆண்மைகள் செய்த போரினால் (ஆண்மை – ஆளுந்தன்மை), நல் அராக் கதுவியாங்கு – நல்ல பாம்பு கடித்தாற்போல், என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே – வருந்தும் என் நெஞ்சம் மேலும் சுழலுகின்றது

 

Kurunthokai 43, Avvaiyār, Pālai Thinai – What the heroine said to her friend
I was careless thinking he’d
never leave,
and he was careless thinking
I would not consent.

Both our strong wills created
friction, and my sad heart
suffers as though it has been
bit by a cobra.

 

Notes:  தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி, தோழியிடம் உரைத்தது.

 

Meanings:  செல்வார் அல்லர் என்று – that he would never leave, யான் இகழ்ந்தனன் – I made a mistake, I was not careful, ஏ – அசை நிலை, an expletive, ஒல்வாள் அல்லள் என்று – that she would not agree, அவர் இகழ்ந்தனர் – he made a mistake, he was not careful, ஏ – அசை நிலை, an expletive, ஆயிடை – between, இரு பேர் ஆண்மை – two people’s strong will (ஆண்மை – ஆளுந்தன்மை), செய்த பூசல் – created friction, நல் அரா – நல்ல பாம்பு, cobra, கதுவியாங்கு – like it has been bit, என் அல்லல் நெஞ்சம் – my sad heart, அலமலக்குறும் – it suffers, ஏ – அசை நிலை, an expletive

4. குறுந்தொகை பாடல் - 41
6. குறுந்தொகை பாடல் - 44