குறுந்தொகை 44, வெள்ளிவீதியார் 

காலே பரி தப்பினவே, கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே,
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே.

 

பாடல் பின்னணி:  தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்ற பின்னர், அவர்களைப் பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலி கூறுகின்றாள்.

 

பொருளுரை:  என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன.  என் கண்கள் பிறரைப் பார்த்துப் பார்த்து ஒளியை இழந்து விட்டன. உறுதியாக, இந்த உலகத்தில்,  அகண்ட இருண்ட  வானத்தில் இருக்கும் விண்மீன்களை விட அதிகப் பேர் உள்ளனர் (தலைவனும் தலைவியும் அல்லாத பிறர்).

 

Kurunthokai 44, Velliveethiyār, Pālai Thinai – What the foster mother said
My weary feet have become tired.
My eyes, looking and looking,
have lost their luster.

Surely, they are more in numbers
than the stars in the wide dark sky,
people in this world who are not them.

 

Notes:  தலைவி தலைவனின் போன பின்பு அவர்களை பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலித்தாய் அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது.  இரா. இராகவையங்கார் உரை – அகன்ற பெருவிசும்பின் மீனினும் பலர் இவ்வுலகத்துப் பிறர் ஆடவர் உள்ளனர் என்றது அம்மீன் நடுவண் விளங்கும் உவா மதியனையாரைக் காணேன் என்று குறித்ததாம்.  இதை ‘வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே’ (அகநானூறு 147) என்றபடி இவர் செலவயர்ந்துழிக் கூறிய பாட்டாகும்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

 

Meanings:  கால் – my feet, ஏ – அசை நிலை, an expletive, பரி தப்பின – they became tired after walking and walking, ஏ – அசை நிலை, an expletive, கண் – my eyes, ஏ – அசை நிலை, an expletive, நோக்கி நோக்கி வாள் இழந்தன – they have lost brightness looking and looking, ஏ – அசை நிலை, an expletive, அகல் இரு – wide and dark, விசும்பின் – in the sky, மீனினும் – more than the stars, பலரே – more people, ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது, implies certainty, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, இவ் உலகத்து பிறர் – other people in the world, people other than the hero and heroine, ஏ – அசை நிலை, an expletive

5. குறுந்தொகை பாடல் - 43
7. குறுந்தொகை பாடல் - 49