குறுந்தொகை 58, வெள்ளிவீதியார் 

இடிக்கும் கேளிர்! நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று, மற்றில்ல,
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்,
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்  5
பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே.

 

பாடல் பின்னணி:  தன்னை இடித்துக் கூறிய தோழனை நோக்கி, தலைவன் இவ்வாறு கூறுகின்றான்.

 

பொருளுரை:   இடித்துரைக்கும் நண்பரே!   நுமது காரியமாக என் காதல் நோயை நிறுத்தல் செய்தால் நல்லது.   பிற இல்லை.  கதிரவன் காய்தலாலே வெம்மையுடைய பாறையில், கை இல்லாத ஊமை ஒருவன் தன்  கண்ணினால் பாதுகாக்கும் வெண்ணையைப் போலப் பரவியுள்ளது என்னுடைய இந்தக் காதல் நோய்.  இதைப் பொறுத்துக் கொள்வது கடினம்.

 

குறிப்பு:  கழறுதல் – தலைவனைப் பாங்கன் இடித்துரைத்தல்.  மற்றில்ல (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிற இலவாகும், உ. வே. சாமிநாதையர் உரை – மன் தில்ல, தில் விழைவின்கண் வந்தது, தமிழண்ணல் உரை – மன் தில்ல, தில் விருப்பத்தை உணர்த்தும் இடைச்சொல்.  ஆற்றினோ – ஓகாரம், அசை நிலை. அரிதே – ஏகாரம் அசை நிலை.

 

சொற்பொருள்:  இடிக்கும் கேளிர் – இடித்துரைக்கும் நண்பரே,  நுங்குறை ஆக – நுமது காரியமாக,  நிறுக்கல் ஆற்றினோ நன்று – என் காதல் நோயை நிறுத்தல் செய்தால் நல்லது,  மற்றில்ல – பிற இல்லை (அல்லது மன் தில்ல),  ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் – கதிரவன் காய்தலாலே வெம்மையுடைய பாறையினிடத்தே, கை இல் ஊமன் – கை இல்லாத ஊமை ஒருவன், கண்ணின் காக்கும் வெண்ணெய் – கண்ணினால் பாதுகாக்கும் வெண்ணை,  உணங்கல் போல – உருகிய வெண்ணையைப் போல, பரந்தன்று இந்நோய்  – பரவியுள்ளது இந்த காதல் நோய், நோன்று கொளற்கு அரிதே – இதைப் பொறுத்துக் கொள்வது அரிது

 

Kurunthokai 58, Velliveethiyār, Kurinji Thinai – What the hero said to his friend
My friend who goads me to stop
seeing her!  Yes, I know it would
be very good if I could do that.
But my love disease has spread like
butter that melts on a boulder scorched
by the hot sun, while a man with no hands,
who is unable to speak, tries to save it with
his eyes.  It will be difficult to tolerate it.

 

Notes:  தன்னை இடித்துக் கூறிய நண்பனிடம் தலைவன் கூறியது.  மற்றில்ல (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிற இலவாகும், உ. வே. சாமிநாதையர் உரை – மன் தில்ல, தில் விழைவின்கண் வந்தது, தமிழண்ணல் உரை – மன் தில்ல, மன் – மிக, தில் விருப்பத்தை உணர்த்தும் இடைச்சொல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நற்றிணை 392 – மன் தில்ல என்னும் இடைச்சொற்கள் மற்றில எனப் புணர்ந்தன.

 

Meanings:  இடிக்கும் கேளிர் – O friend who goads me, நுங்குறை ஆக – what you complain about, நிறுக்கல் – stopping, ஆற்றின் – if I do that, ஓ – அசை நிலை, an expletive, நன்று – good, மற்றில்ல – nothing else or மன் – அசை நிலை, an expletive, மிகுதிக் குறிப்பு, signifying abundance, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச் சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle which implies desire, ஞாயிறு காயும் – the sun-scorched, வெவ்வறை மருங்கில் – on a hot boulder, கை இல் – without hands, ஊமன் – a man who is unable talk, a dumb man, கண்ணின் காக்கும் – saving with his eyes, வெண்ணெய் உணங்கல் போல – like the melting butter, பரந்தன்று இந்நோய் – this disease has spread, நோன்று கொளற்கு அரிது – it is difficult to tolerate it, ஏ – அசை நிலை, an expletive

7. குறுந்தொகை பாடல் - 49
9. குறுந்தொகை பாடல் - 87