1. கதைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் இருபத்தி ஐந்து   சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து ஒரு பாடலின்   செய்தியை மையக் கருத்தாகக் கொண்டு சமகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகளாக இருக்க வேண்டும். சங்கப்பாடல்களை www.konrai.org/கவிதைகள் என்ற இணையதளத்தில்  அறிந்து கொள்ளலாம்.

2. சிறுகதையோடு அது எந்தச் சங்க இலக்கியப் பாடலை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டும். பாடலின் எண்ணைக் குறிப்பிடவும்.

3. சங்க இலக்கியப்பாடலின் விளக்கவுரையாக இருக்கக் கூடாது. புனையப்பட்ட சிறுகதையாக இருக்க வேண்டும்

4. ஒருவர் எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

5. கதைகளுடன்  ‘ கதைகள் எனது சொந்தக் கற்பனையில் உருவான புனைவுகளே.அவை தழுவலோ, மொழி பெயர்ப்போ பிறிதொன்றின் நகலோ அல்ல’ என்ற உறுதிமொழி இணைக்கப்பட வேண்டும். கதைகள் பிறரது எழுத்தை நகலெடுத்தோ, களவாடியோ, தழுவியோ எழுதப்பட்டிருந்தால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

6. கதைகள் யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும் . கதைகள் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல்  முகவரி kumudamkonrai@gmail.com

7. சிறுகதை ஆசிரியரின் பெயர், முகவரி ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். அயல் நாட்டிலிருந்து பங்கேற்போர் தங்கள் முகவரியை ஆங்கிலத்தில் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

8. பங்கேற்கும் படைப்பாளிகள் அவர்கள் அனுப்பும் படைப்பின் நகல் ஒன்றை தங்கள் வசம் வைத்துக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.

9. கதைகள் 1000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்

10. தேவை ஏற்படின் பிரசுரமாகும் கதைகளைத் திருத்தவோ, சுருக்கவோ குமுதம் ஆசிரியர் குழுவிற்கு உரிமை உண்டு

11. எல்லா விஷயங்களிலும் குமுதம் ஆசிரியரின் முடிவே இறுதியானது.

12. கதைகள் வந்து சேர வேண்டிய கடைசித்தேதி:  மார்ச் 31, 2020.

13. கதைகளைத் தபால் மூலமும் அனுப்பலாம். குமுதம்-கொன்றை, சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி, தபால் பெட்டி எண்  – 2592, சென்னை – 31  என்ற முகவரிக்கு அனுப்பலாம்.   இயன்ற வரை மின்னஞ்சலில் அனுப்பினால் உதவியாக இருக்கும். 

கவிதைகள், அவற்றின் விளக்கங்களைப் பெற   www.konrai.org/கவிதைகள்